ஊத்தங்கரை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 200 வாத்துகள் செத்தன
ஊத்தங்கரை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 200 வாத்துகள் செத்தன.
கல்லாவி, ஏப்.24-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஐத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 22). வாத்து வியாபாரி. இவர் விற்பனை செய்வதற்காக சரக்கு வேனில் 1000-க்கும் மேற்பட்ட வாத்துகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டு இருந்தார். ஊத்தங்கரை அருகே வீரியம்பட்டி கூட்டு ரோடு அருகே நேற்று காலை வேன் சென்று கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் செத்தன. மேலும் 300-க்கும் மேற்பட்ட வாத்துகளுக்கு கால் முறிந்தது. பிரகாஷ் லேசான காயம் அடைந்தார். விபத்து குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story