13 பேருக்கு கொரோனா தொற்று: ஒன்னுப்பள்ளி கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு


13 பேருக்கு கொரோனா தொற்று: ஒன்னுப்பள்ளி கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 10:06 PM IST (Updated: 23 April 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் ஒன்னுப்பள்ளி கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் ஒன்னுப்பள்ளி கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒன்னுப்பள்ளி கிராமத்தில் 13 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.  இதையடுத்து அவர்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார மருத்துவ அலுவலர் சசிரேதா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன், கிராம சுகாதார செவிலியர் லட்சுமி மற்றும் சுகாதார அலுவலர்கள் ஒன்னுப்பள்ளி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். 
தீவிர கண்காணிப்பு
தொடர்ந்து கிராம மக்கள் வெளியே செல்லவும், வெளிநபர்கள் கிராமத்திற்கு உள்ளே வரவும் தடை விதித்து கிராமத்திற்கு செல்லும் நுழைவு வாயிலில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கிராம மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால், எரிபொருள் உள்ளிட்ட தேவைகளை அதிகாரிகள் பூர்த்தி செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த கிராமத்தை சுகாதாரத்துைற அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story