கிருஷ்ணகிரி சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் புளி விலை சரிவு விவசாயிகள் கவலை
கிருஷ்ணகிரி பழையபேட்டை சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் புளி விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் புளி விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
புளி விற்பனை
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் புளிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கு சந்தை நடைபெறும்.
இந்த சந்தையில் ஏராளமான விவசாயிகள் புளிகளை வாகனங்களில் ஏற்றி வந்து விற்பனைக்காக சாலையோரம் குவித்து வைப்பார்கள். வியாபாரிகள் புளியின் தரத்தை பார்த்து வாங்கி செல்வது வழக்கம். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ புளி தரத்திற்கு ஏற்ப ரூ.27 முதல் ரூ.45 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விலை சரிவு
இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் நேற்று முன்தினம் சந்தை கூடியது. சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் புளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வரத்து அதிகரிப்பால் புளியின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் சரிவடைந்தது. ஒரு கிலோ புளி அதிகபட்சமாக ரூ.35-க்கு விற்பனையானது. விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
Related Tags :
Next Story