என்ஜினீயர் கொலையில் 3 பேர் கைது


என்ஜினீயர் கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2021 10:20 PM IST (Updated: 23 April 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலூர்,ஏப்
மேலூர் அருகே சிவகங்கை ரோட்டில் உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மரைக்காயர் என்பவரது மகன் அஜீஸ் (வயது 27). என்ஜினீயர். இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் சச்சிதானந்தம் (60) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது.
இதில் என்ஜினீயர் அஜீஸ் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மேலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சச்சிதானந்தம், அழகர், இளையராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story