மொரப்பூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை புளியமரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மொரப்பூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது புளிய மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மொரப்பூர்:
மொரப்பூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது புளிய மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்கட்டி மழை
மொரப்பூர் பகுதியில் நேற்று ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதனால்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர், நவலை, கம்பநல்லூர், சிந்தல்பாடி, ராமியனஅள்ளி, தென்கரைகோட்டை, மருதிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வாழை மரங்கள், முருங்கை மரங்கள், வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்தன.
அதேபோல் மொரப்பூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் ரோட்டில் வகுத்தனூர் பஸ் நிறுத்தம் அருகில் இருந்த புளியமரம் ஒன்று சூறாவளி காற்று சாலையில் சாய்ந்தது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொரப்பூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் தேங்கி நின்றது.
போக்குவரத்து சீரமைப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் பாஸ்கரன், சாலை ஆய்வாளர்கள் மகாலிங்கம், ராமமூர்த்தி மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து சென்று புளிய மரத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர்.
Related Tags :
Next Story