கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து வந்த இலங்கை படகு


கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து வந்த இலங்கை படகு
x
தினத்தந்தி 23 April 2021 11:05 PM IST (Updated: 23 April 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரையில், கடலில் கவிழ்ந்த நிலையில் இலங்கை படகு மிதந்து வந்தது. அந்த படகை சுங்க இலாகா அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:
கோடியக்கரையில், கடலில் கவிழ்ந்த நிலையில் இலங்கை படகு மிதந்து வந்தது. அந்த படகை சுங்க இலாகா அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மிதந்து வந்த படகு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மேற்குப்பகுதி செல்லக்கன்னி வாய்க்கால் முகத்துவார பகுதியில் கவிழ்ந்த நிலையில் ஒரு பைபர் படகு மிதந்து வந்துள்ளது. இதை பார்த்த மீனவர்கள் இதுகுறித்து கோடியக்கரை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சுங்க இலாகா அதிகாரி சண்முகசுந்தரம் தலைமையில் சுங்க இலாகாவினர் மற்றும் மீனவர்கள் அந்த பகுதிக்கு சென்று கவிழ்ந்த நிலையில் மிதந்து வந்த அந்த படகை மீட்டு கயிறு கட்டி இழுத்து கோடியக்கரை கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.
அதிகாரிகள் விசாரணை
பின்னர் டிராக்டர் உதவியுடன் கடற்கரையில் இருந்து சுங்க இலாகா அலுவலகத்திற்கு அந்த படகை எடுத்துச்சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர். அந்த படகில் ஓ.எப்.ஆர்.பி-ஏ-4353 ஜெ.எப்.என் என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் இந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இந்த படகு கடலில் மூன்று மாதத்திற்கு மேல் மிதந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்த படகில் கடத்தல்காரர்கள் வந்தார்களா? அல்லது தீவிரவாதிகள் வந்தார்களா? கஞ்சா கடத்தி சென்றபோது படகு கவிழ்ந்ததா? என பல்வேறு கோணங்களில் சுங்க இலாகாவினர் மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்துறை அதிகாரிகள் இது குறித்து தகவல் சேகரித்து உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story