வாலிபர் கொலையில் கைதான 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


வாலிபர் கொலையில் கைதான 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 April 2021 11:55 PM IST (Updated: 23 April 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் 19 வயது வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதான 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

மானாமதுரையில் 19 வயது வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதான 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 5-ந்தேதி காலையில் அக்னிராஜ் (வயது 19) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய சிவகங்கை காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22), உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தர்மர் என்ற தர்மராஜ் (25), சக்திவேல் (24), சிவகங்கை மாடன்குளத்தைச் சேர்ந்த பொன்னையா (24), திருப்பாச்சேத்தியை அடுத்த தாலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்ற பூச்சி இருளப்பன் (23) ஆகிய 5 பேரை மானாமதுரை நகர் போலீசார் கைது செய்தனர்.
தற்போது இவர்கள் 5 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதை தொடர்ந்து 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் மதுரை சிறையில் உள்ள 5 பேருக்கும் வழங்கப்பட்டது.

Next Story