லாலாபேட்டையில் மூதாட்டியிடம் 16½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைது


லாலாபேட்டையில் மூதாட்டியிடம் 16½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைது
x
தினத்தந்தி 24 April 2021 12:00 AM IST (Updated: 24 April 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டையில் மூதாட்டியிடம் 16½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

லாலாபேட்டை,
மின்வாரிய ஊழியர்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை காஞ்சி நகரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 62). லாலாபேட்டை அருகே உள்ள பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் அரவக்குறிச்சியில் உள்ள மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 
சசிகுமாரின் நண்பர் வேலவேந்தன். இந்தநிலையில் சசிகுமார், வேலவேந்தன் மூலம் செல்லமாளுடன் அறிமுகம் ஆனார். இந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்லமாளிடம், சசிகுமார் 16½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் கடனுக்கு வாங்கி உள்ளார். 
நகை-பணம் மோசடி
இந்தநிலையில் திடீரென உடல்நல குறைவால் செல்லமாள் இறந்து விட்டார். இதையடுத்து சசிகுமாரிடம் கொடுத்த நகை-பணத்தை செல்லமாளின் மகன் தனபால் பலமுறை கேட்டும் ெகாடுக்கவில்லை. இதனால் நகை-பணத்தை சசிகுமார் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 
கைது
இதையடுத்து தனபால் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, மின்வாரிய ஊழியர் சசிகுமாரை கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த வேலவேந்தன், அவரது மனைவி ராஜலெட்சுமி மற்றும் விஜயநிர்மலா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story