மோகனூர் அருகே லாரி உரிமையாளருக்கு கத்திக்குத்து; டிரைவர் கைது


மோகனூர் அருகே லாரி உரிமையாளருக்கு கத்திக்குத்து; டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 April 2021 12:07 AM IST (Updated: 24 April 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே லாரி உரிமையாளருக்கு கத்திக்குத்து; டிரைவர் கைது

மோகனூர்:
மோகனூர் அருகே வளையப்பட்டி ஊராட்சி ரெட்டையாம்பட்டியை சேர்ந்தவர் மணிக்குமார் (வயது 42). சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது லாரியில் திருச்சி மாவட்டம் தொட்டியம் ஏலூர்பட்டி அருகே குண்டுமணிபட்டியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். 
இந்தநிலையில் சுரேஷ் தனக்கு படிகாசு வேண்டும் என கேட்டு லாரி உரிமையாளரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வளையப்பட்டி காட்டுப்புத்தூர் பிரிவு ரோடு அருகே உள்ள ஒரு லாரி பட்டறையில் மணிக்குமார் இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், லாரி உரிமையாளர் மணிக்குமாரிடம் தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிக்குமாரை குத்தியதுடன தகாத வார்தையால் திட்டி மிரட்டல் விடுத்தார். கத்திக்குத்தில் காயமடைந்த மணிக்குமார் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேசை தேடி வந்தனர். 
இந்தநிலையில் வளைப்பட்டி அருகே தலைமலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
========

Next Story