ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்பட்டது.
வாடிப்பட்டி,ஏப்
வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை தாங்கினார். இதில் 9 விவசாயிகள் 20 ஆயிரத்து 750 தேங்காய்களை 11 குவியல்களாக வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் 9 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்ச விலையாக ரூ.10.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.9.05-க்கும், சராசரியாக ரூ.9.30-க்கும் ஏலம் எடுத்தனர். அதற்குரிய பணம் உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 1.93 லட்சம் தேங்காய்கள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story