வண்டல் மண் கடத்திய லாரி பறிமுதல்


வண்டல் மண் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 24 April 2021 1:28 AM IST (Updated: 24 April 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

வண்டல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியில் உள்ள குளங்களில் அனுமதி இன்றி வண்டல் மண் அள்ளி கடத்தப்படுவதாக கறம்பக்குடி வருவாய்த் துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அய்யங்காட்டில் இருந்து வேகமாக சென்ற லாரியை நிறுத்த சைகை காட்டியபோது அதன் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த லாரியை சோதனையிட்டபோது அதில் குளத்தில் இருந்து வண்டல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், மழையூர் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்.


Next Story