பரவை பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது


பரவை பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 24 April 2021 1:32 AM IST (Updated: 24 April 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

ஊழியருக்கு கொரோனா தொற்று எதிரொலியாக பரவை பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது

வாடிப்பட்டி, ஏப்.
மதுரை அருகே பரவை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் அனைவருக்கும் சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்த பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பின் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கதவுகள் மூடப்பட்டது. மேலும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின் 2 நாட்கள் கழித்து அலுவலகம் திறக்கப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார்.

Next Story