தொகுப்பு வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை


தொகுப்பு வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 24 April 2021 1:33 AM IST (Updated: 24 April 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

தொகுப்பு வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அன்னவாசல்
புதுக்கோட்டை அருகே உள்ள வடசேரிபட்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் கட்டுமான பணிகளை தொடங்க பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கட்டிட பொருட்களுடன் நேற்று முன்தினம் அக்கிராமத்திற்கு வந்தனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறை பிடித்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட இடத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்ட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும். ஆகவே குடியிடிருப்பு கட்ட அனுமதிக்க மாட்டோம் என்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மற்றொரு தேதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும், அதுவரை அந்த இடத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் நடைபெறும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story