திருச்சி விமான நிலைய பஸ்நிலையத்தில் 800 கிராம் தங்க நகையுடன் 2 பேர் கைது


திருச்சி விமான நிலைய பஸ்நிலையத்தில் 800 கிராம் தங்க நகையுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 April 2021 1:43 AM IST (Updated: 24 April 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலைய பஸ்நிலையத்தில் 800 கிராம் தங்க நகையுடன் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

செம்பட்டு, 
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஏர்போர்ட் பஸ்நிறுத்தம் அருகே அமர்ந்து இருந்த திருச்சி மேலசிந்தாமணி காயிதேமில்லத் தெருவை சேர்ந்த நாகூர்மீரான்(வயது 39), ஷேக்உஸ்மான்(35) ஆகியோரை பிடித்து ஏர்போர்ட் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து தலா 400 கிராம் எடையுள்ள 2 தங்கசங்கிலி இருந்தது. அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளிக்கவே 2 பேரையும் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அந்த தங்க சங்கிலிகள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அதை கடத்தி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story