போலீசாருக்கு இருசக்கர வாகனம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வழங்கினார்


போலீசாருக்கு இருசக்கர வாகனம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வழங்கினார்
x
தினத்தந்தி 24 April 2021 1:56 AM IST (Updated: 24 April 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை இருசக்கர வாகனம் வழங்கினார்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்களை தடுக்கவும், குற்றம் நடந்த இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தவும், ஈரோடு மாவட்டத்திற்கு 31 இருசக்கர வாகனங்களை தமிழக காவல்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த வாகனங்களை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நேற்று போலீசாருக்கு வழங்கினார். பெண் போலீசாருக்கு 24 வாகனங்களும், ஆண் போலீசாருக்கு 7 வாகனங்களும் என மொத்தம் 31 வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்

Next Story