முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் ரத்து

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் ரத்து
x

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருச்சி, 
முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 2-ந்தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக திருச்சி-காரைக்குடி, காரைக்குடி-திருச்சி, திருச்சி -கரூர், கரூர்- திருச்சி, விழுப்புரம் -மதுரை, மதுரை- விழுப்புரம் உள்ளிட்ட சில சிறப்பு ரெயில்கள் நாளையும், மே 2-ந் தேதியும் இயங்காது என்று தென்னக ரெயில்வேயின் தலைமையகம் அறிவித்துள்ளது.

Next Story