வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் கவுன்சிலர் மனைவியுடன் கைது


வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்  முன்னாள் கவுன்சிலர் மனைவியுடன் கைது
x
தினத்தந்தி 24 April 2021 2:02 AM IST (Updated: 24 April 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் கவுன்சிலர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

கொள்ளிடம்டோல்கேட், 
வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் கவுன்சிலர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

திருச்சி வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை குடித்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் வினோத் (வயது 31). லாரி டிரைவரான இவர் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அவரது செல்போனில் தற்கொலைக்கான காரணம் குறித்து பேசி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். 

அந்த வீடியோவில், சென்னக்கரை முருகன்கோவில் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் (53), அவரது மனைவி சித்ரா (48) இருவரும்தான் என் சாவுக்கு காரணம் அவர்கள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர். அதனால் நான் சாக போகிறேன் என்று அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. 

இதனால் வினோத்தின் தந்தை ராதாகிருஷ்ணன் (58) என் மகன் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாத்தலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், தற்கொலை வழக்கை மாற்றி, வினோத்தை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜேந்திரன், அவருடைய மனைவி சித்ரா ஆகியோரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story