கல்லூரி மாணவி கொரோனா விழிப்புணர்வு


கல்லூரி மாணவி கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 April 2021 2:10 AM IST (Updated: 24 April 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 ஆலங்குடி
 கே.வி.கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வகுமாரின் மகள் துளசி. புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர், தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை உடலில் கட்டிக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் முககவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினார். அப்போது அந்த வழியாக ரோந்துப்பணியில் ஈடுபட்ட ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஜீப்பை விட்டு இறங்கி வந்து துளசியை பாராட்டினார். பொதுமக்களும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story