மின்கம்பி அறுந்து விழுந்து 2 பசு மாடுகள் சாவு
மின்கம்பி அறுந்து விழுந்து 2 பசு மாடுகள் பரிதாபமாக செத்தன.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57), விவசாயி. இவர் 4 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம்போல அந்த பகுதியில் உள்ள வயல்காடு பகுதியில் மேய்ச்சலுக்கு பசு மாடுகள் சென்றிருந்தன. அப்போது அந்த வயலின் மேலே சென்று கொண்டிருந்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் 2 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இளநிலை மின் பொறியாளர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story