அம்மாபேட்டை அருகே கொரோனாவுக்கு டிரைவர் பலி வங்கி மேலாளர் உள்பட 25 பேருக்கு பாதிப்பு


அம்மாபேட்டை அருகே கொரோனாவுக்கு டிரைவர் பலி வங்கி மேலாளர் உள்பட 25 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 8:55 PM GMT (Updated: 23 April 2021 8:55 PM GMT)

அம்மாபேட்டை அருகே கொரோனா தொற்றால் டிரைவர் ஒருவர் பலியானார். மேலும் அம்மாபேட்டை பகுதியில் வங்கி மேலாளர் உள்பட 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அம்மாபேட்டை அருகே கொரோனா தொற்றால் டிரைவர் ஒருவர் பலியானார். மேலும் அம்மாபேட்டை பகுதியில் வங்கி மேலாளர் உள்பட 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 
சாவு
கொரோனா தொற்றின் 2-வது அலை ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அம்மாபேட்டையை சுற்றியுள்ள சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குட்டை முனியப்பன் ேகாவிலை சேர்ந்த 60 வயது உடைய அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற டிரைவர் ஒருவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். 
வங்கி மேலாளர் 
இதேபோல் அம்மாபேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த வங்கி மேலாளருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிபடுத்தப்பட்டது. இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வங்கியில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 2 பெண் ஊழியர்கள் உள்பட 4 பேருக்கு கோரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக அம்மாபேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதுமட்டுமின்றி அம்மாபேட்டை வட்டார மருத்துவ அதிகாரி அருள்மணி தலைமையிலான மருத்துவ குழுவினர் வங்கியில் தொடர்பில் இருந்த வாடிக்கையாளர்களுக்கும் ெகாரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
25 பேர்
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 25 பேரில் 15 பேர் ஆஸ்பத்திரியிலும், 10 பேர் வீட்டு தனிமையிலும் உள்ளனர். 
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் பகுதிகளில் சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story