கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சாவு


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 24 April 2021 2:37 AM IST (Updated: 24 April 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் இறந்தார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 12-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அய்யனார் கோவில் தெருவில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் அய்யனார் கோவில் தெருவில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி உள்ளிட்டவைகளை தெளித்து சுகாதாரப் பணி மேற்கொண்டனர்.
இதற்கிடையே உட்கோட்டை கிராமத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அரசின் விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story