கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 10 பஸ்களுக்கு நோட்டீஸ்


கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 10 பஸ்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 23 April 2021 9:29 PM GMT (Updated: 23 April 2021 9:29 PM GMT)

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 10 பஸ்களுக்கு நோட்டீஸ்

பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் 30 பஸ்களில் அரசு அறிவித்த கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முககவசம் அணியாமலும், இருக்கைக்கு அதிகமாக, பயணிகள் நிற்கும் வகையில் ஏற்றிச்சென்ற 10 பஸ்களின் கண்டக்டர்களுக்கு தணிக்கை அறிக்கை (நோட்டீஸ்) வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ்களில் முககவசம் அணியாத பயணிகளுக்கு, முககவசத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி வழங்கினார். பின்னர் அவர் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகளிடம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், பஸ்களில் பயணம் செய்பவர்கள் அனைவரும் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பஸ்களில் நின்று கொண்டு பயணிகள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும், என்றார். ஆய்வின்போது மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் உடனிருந்தார்.

Next Story