லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகள்
லாரி கவிழ்ந்ததில் சாலையில் கோதுமை மூட்டைகள் சிதறிக்கிடந்தன.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணா. டிரைவரான இவர் தஞ்சாவூரில் இருந்து லாரியில் 600 கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அங்குள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு சென்று கொண்டிருந்தார். நேற்று மாலை விளாங்குடியை கடந்து அந்த லாரி சென்றது. அப்போது அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெறுவதால், எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் விதமாக லாரியை டிரைவர் கருணா திருப்பியுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கோதுமை மூட்டைகள் சாலையில் விழுந்து சிதறி கிடந்தன. மேலும் டிரைவர் கருணா படுகாயமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் சாலையில் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றி ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story