போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது


போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 April 2021 3:28 AM IST (Updated: 24 April 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செங்கானூரை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருடைய மகன் முத்து கதிரேசன் (வயது 24). டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்றும், தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரெகுராஜன் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து  முத்து கதிரேசனை கைது செய்தார்.


Next Story