சிப்ஸ் கடையில் திருடிய 3 பேர் கைது
கடையநல்லூர் அருகே சிப்ஸ் கடையில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் தாலுகா குமந்தாபுரம் அருகே ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான சிப்ஸ் கடையில் சிந்தாமணியை சேர்ந்த கருப்பசாமி (வயது 52) என்பவர் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த பணம் மற்றும் பேக்கிங் மெஷின் போன்றவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி, காசிதர்மத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் குமார் (22), ஊர்மேலழகியானைச் சேர்ந்த மாரிமுத்து (52), கடையநல்லூரை சேர்ந்த லியாக்அலி மகன் அப்துல் பைசல் (37) ஆகியோரை கைது செய்தார்.
Related Tags :
Next Story