உர விலை உயர்வை கண்டித்து கொங்கணாபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


உர விலை உயர்வை கண்டித்து கொங்கணாபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 April 2021 3:53 AM IST (Updated: 24 April 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி:
உர விலை உயர்வை கண்டித்து கொங்கணாபுரம் ரவுண்டானாவில் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பழனியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகரி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.  இதில் உர விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story