தலைவாசல் அருகே 109 லிட்டர் சாராயம் பறிமுதல்


தலைவாசல் அருகே  109 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 April 2021 3:53 AM IST (Updated: 24 April 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

109 லிட்டர் சாராயம் பறிமுதல்

தலைவாசல்:
தலைவாசல் அருகே சிறுவாச்சூர் உடைந்த பாலம் அருகில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, சீனிவாசன் ஆகியோர் விரைந்து சென்று சிறுவாச்சூர் உடைந்த பாலம் அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவில் சோதனை செய்தனர். அப்போது அதில் 30 மூட்டை வெல்லம், 15 மூட்டை சர்க்கரை, 109 லிட்டர் சாராயம் ஆகியவை இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் சரக்கு ஆட்டோவின் உரிமையாளர் சிறுவாச்சூர் வ.உ.சி. நகரை சேர்ந்த சிவபாலன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோ, 30 மூட்டை வெல்லம், 15 மூட்டை சர்க்கரை, 109 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story