கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு


கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 24 April 2021 10:32 AM IST (Updated: 24 April 2021 10:32 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை உடைக்க முயற்சி செய்து உள்ளனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி, சத்தியவாணிமுத்து நகர் உதயகுமார் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவர், செம்பியம் அம்மன் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். மர்மநபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

மேலும் அருகில் இருந்த அம்மன் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை உடைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் முடியாததால் தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து 25 செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

கரையான்சாவடியில் உள்ள மற்றொரு செல்போன் கடையின் பூட்டை உடைத்து 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள், ரூ.78 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

இது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story