அவசர தேவைகளுக்காக பயணம் செய்ய இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகம்


அவசர தேவைகளுக்காக பயணம் செய்ய இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகம்
x
தினத்தந்தி 24 April 2021 11:18 AM IST (Updated: 24 April 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

அவசரகால பயணம் மேற்கொள்ள மராட்டியத்தில் இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

கொரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக பயணம் செய்ய இ-பாஸ் முறை அமலில் இருந்தது. பின்னர் ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்ட தளர்வுகள் காரணமாக இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் 2-வது கொரோனா அலை காரணமாக மராட்டியத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி நகரம், மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய, அவசர தேவைகளுக்கு மாவட்டம், நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய மாநிலத்தில் இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில டி.ஜி.பி. சஞ்சய் பாண்டே கூறுகையில், "வெள்ளிக்கிழமை (நேற்று) முதல் இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் அவசரம் என்றால் மட்டும் பொதுமக்கள் இதை பயன்படுத்த வேண்டும். பொது மக்கள் இ-பாசுக்கு covid19.mhpo.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்கள், காரணங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் இ-பாஸ் பெற முடியாதவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலும் பெற்று கொள்ளலாம்’’ என்றார்.

முன்னதாக மும்பையில் போலீசார் அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களில் சிவப்பு, பச்ைச, மஞ்சள் நிற ஸ்டிக்கரை ஒட்ட உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story