ஏரியில் சவுடு மண் எடுப்பதை தடுக்க கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு


ஏரியில் சவுடு மண் எடுப்பதை தடுக்க கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 April 2021 3:15 PM IST (Updated: 24 April 2021 3:15 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் தலக்காஞ்சேரி ஏரியில் சவுடு மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ஆழத்தில் சவுடு மண் தோண்டி எடுத்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் ஆற்று மணலையும் எடுத்துச்செல்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அளவுக்கதிகமாக சவுடு மண் எடுப்பதையும், சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுப்பதையும் தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story