திருவள்ளூரில் பஸ்நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை


திருவள்ளூரில் பஸ்நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 April 2021 4:07 PM IST (Updated: 24 April 2021 4:07 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பஸ்நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட தலைநகரிலிருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் திருவள்ளூர் பஸ்நிலையத்திலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் பூண்டி ஊராட்சி ஒன்றியம், சிறுவானூர் ஊராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலத் தில் புதியபஸ் நிலையம் அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. தற்போது பஸ் நிலையம் அமைப்பதற்கான அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சூழ்நிலையில் பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மேற்பார்வையில், புல்லரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அங்கு வந்து எச்சரிக்கை பலகையை அங்கு அமைத்தனர்.

Next Story