பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்


பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
x
தினத்தந்தி 24 April 2021 12:27 PM GMT (Updated: 24 April 2021 12:27 PM GMT)

திருச்செந்தூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருச்செந்தூர், ஏப்:
திருச்செந்தூரில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் அமைப்பும், திருச்செந்தூர் போக்குவரத்து போலீசும் இணைந்து கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கியது. நிகழ்ச்சிக்கு ஆதித்தனார் கல்லூரி முன்னாள் வேதியியல் துறை தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், ஆதித்தனார் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஆறுமுககனி, ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கதிரேசன், கல்லூரி பேராசிரியர்கள் அன்பரசன், முத்துக்குமார், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் பாலகுமார், மாணவர்கள் லிங்கேஸ்வரன், அஸ்வின், பொதுநல தொண்டர் கார்கி, சிவா ஆழ்வார், கோமதிநாயகம், ராஜமாதங்கன், பால்ராஜ், ராம்பிரபு, மணிவண்ணன் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மத்திய அரசின் பரிந்துரையை பெற்ற ஆர்சனிக் ஆல்பம் என்ற ஹோமியோபதி கொரனோ தடுப்பு மருந்தினை போலீசாருக்கு வழங்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் பேராசிரியர் மணிராம்குமார் வழங்கினார்.

Next Story