கொரோனா பரிசோதனை முகாம்
கோவில்பட்டியில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
கோவில்பட்டி, ஏப்:
கோவில்பட்டியில் கொரோனா 2-வது அலை வேகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுக்கிராமம் சிந்தாமணி நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதையொட்டி கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா உத்தரவின் பேரில் நேற்று புதுக்கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. டாக்டர் மனோஜ் தலைமையில் நடந்த இந்த முகாமில் செவிலியர்கள் கலந்துகொண்டு இப்பகுதியில் உள்ள 100 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story