குமரலிங்கம் ராஜவாய்க்கால் மீது விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரலிங்கம் ராஜவாய்க்கால் மீது விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தினத்தந்தி 24 April 2021 7:33 PM IST (Updated: 24 April 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

குமரலிங்கம் ராஜவாய்க்கால் மீது விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
குமரலிங்கம் ராஜவாய்க்கால் மீது விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலட்சியப் போக்கு
விவசாய மேம்பாடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் மேம்பாட்டிலும் நீராதாரங்களின் பங்கு பெருமளவு உள்ளது. அத்துடன் நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிப்பைத் தடுப்பதில் மரங்களின் பங்கு பெருமளவு உள்ளது. இதனால் தான் நமது முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்கும் போதே அதன் கரைகளில் மரங்களை நட்டு வளர்த்தனர்.
ஆனால் தற்போது நீர்நிலைகள் பாதுகாப்பில் எந்த அளவுக்கு அலட்சியப் போக்கு நிலவி வருகிறதோ அதே அளவுக்கு மரங்களின் பாதுகாப்பிலும் அலட்சியப் போக்கு நீடிக்கிறது. அந்தவகையில் குமரலிங்கம் ராஜவாய்க்கால் கரையில் நிற்கும் பல மரங்கள் பராமரிப்பில்லாமல் படிப்படியாக விழுந்து வருகிறது. தற்போது ஒரு பெரிய மரம் வேருடன் சாய்ந்து ராஜவாய்க்காலின் மேல் கிடக்கிறது. 
ஆக்சிஜன் அவசியம்
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு மனிதன் உயிர் வாழ்வதற்கும் ஆக்சிஜன் எவ்வளவு அவசியமானது என்பதை இன்றைய இக்கட்டான நிலை நமக்கு உணர்த்தியுள்ளது. தற்போது எளிய முறையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது எப்படி என்று இணையதளங்களில் பலரும் தேடி வருகின்றனர். 
ஆனால் காலம் காலமாக ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மரங்களைப்பற்றி பலரும் யோசிப்பதில்லை. உயிர் காக்கும் மருத்துவ ஆக்சிஜனோடு இதனை ஒப்பிட முடியாது என்றாலும் சுவாசிக்க சுத்தமான ஆக்சிஜன் தருவது மரங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மரங்களின் நிலை
தற்போது குமரலிங்கத்தில் ராஜவாய்க்கால் மீது மரம் சாய்ந்து பல மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் அதனை பாதுகாப்பதில் காட்டப்பட்ட அதே அலட்சியம் அதனை அப்புறப்படுத்துவதிலும் காட்டப்படுகிறது. சிறுவர்கள் சாய்ந்த மரத்தின் மீது ஏறி விளையாடுகிறார்கள். இதனால் எதிர்பாராதவிதமாக கிளை உடைந்து சிறுவர்கள் வாய்க்காலுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே விழுந்த மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாய்க்கால் கரையோரங்களிலுள்ள மரங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவும் அவற்றைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரங்கள் மண் அரிப்பைத் தடுப்பதுடன் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் அதிக அளவில் ஆவியாவதையும் தடுக்கிறது. 
எனவே ராஜவாய்க்கால் கரையில் விவசாயிகளின் உதவியுடன் மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சாக்கடைக் கால்வாயாக மாறிவிட்ட ராஜவாய்க்காலை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story