கோத்தகிரி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்


கோத்தகிரி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 24 April 2021 7:46 PM IST (Updated: 24 April 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

கோத்தகிரி,

நீலகிரியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் மேற்பார்வையில் கோத்தகிரி மிஷன் காம்பவுண்டு, ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. 

மேலும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

கோத்தகிரி பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளான பஸ்நிலையம், அரசு அலுவலகங்கள், பஸ் நிறுத்தங்கள், மார்கெட் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவலை தடுக்க அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story