பழனியில் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
பழனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி ஆய்வு செய்தார்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி நேற்று பழனி பகுதியில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பழனியாண்டவர் கலைக்கல்லூரி பஸ்நிறுத்தம் பகுதியில் முககவசம் அணியாமல் வந்த நபர்களை பிடித்து அவர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
அதைத்தொடர்ந்து அவ்வழியே வந்த பஸ்களை மறித்து அதில் பார்வையிட்டார். அப்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். இருக்கைகளை தவிர்த்து நின்று கொண்டு பயணிக்கும்படி ஆட்களை ஏற்ற கூடாது என டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகர், ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story