திண்டுக்கல்லில் குழாயில் இருந்து வீணாக வெளியேறிய குடிநீர்


திண்டுக்கல்லில் குழாயில் இருந்து வீணாக வெளியேறிய குடிநீர்
x
தினத்தந்தி 24 April 2021 8:26 PM IST (Updated: 24 April 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அண்ணா காலனியில் குழாயில் இருந்து வீணாக குடிநீர் அதிக அளவு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல்-நத்தம் சாலையில் அண்ணா காலனி அருகே பதிக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் இருந்து நேற்று காலையில் 11.30 மணி அளவில் தண்ணீர் வீணாக வெளியேறியது. சுமார் அரைமணி நேரம் குடிநீர் வீணாக வெளியேறியதால் அப்பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறதே என்று புலம்பியபடியே சென்றனர்.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் மாதம் ஒருமுறை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். அதன்படியே நேற்று குழாயில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டு அதற்குள் சேகரமான கசடுகள் அகற்றப்பட்டன. பின்னர் தண்ணீர் குளோரினேசன் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. குழாயில் உடைப்பு ஏதும் ஏற்படவில்லை என்றனர்.

Next Story