டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க குவிந்த மதுபிரியர்கள்
நாகை மாவட்டத்தில் தொடர் விடுமுறையால் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மதுபிரியர்கள் குவிந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் தொடர் விடுமுறையால் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மதுபிரியர்கள் குவிந்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மருந்து, பால், ஓட்டல்களில் பார்சல் தவிர மற்றவை அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) மகாவீரர் ஜெயந்தி என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குவிந்த மதுபிரியர்கள்
நாகை மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மதுபிரியர்களும் நாகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் வாங்க வந்தனர்.
தொடர் விடுமுறை என்பதால் நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் குவிந்தனர். அதிலும் மாலை 5 மணிக்கு மேல் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்ததால் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட மதுபானங்கள் கிடைக்கவில்லை.
Related Tags :
Next Story