பழுதாகி சாலையில் திடீரென நின்ற அரசு பஸ்
நாகையில் பழுதாகி சாலையில் திடீரென அரசு பஸ் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகையில் பழுதாகி சாலையில் திடீரென அரசு பஸ் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரசு பஸ்
நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் பழைய பஸ்நிலையம் வழியாக மேலகோட்டைவாசல்படி பகுதிக்கு வந்தது. அங்கு கொரோனா தொற்று விழிப்புணர்வு பேரணிக்காக வாகனங்கள் வரிசையாக நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழுதாகி நின்றது
அப்போது மேடான பகுதியில் சென்ற போது திடீரென அந்த பஸ் பழுதாகி சாலையில் நின்று விட்டது. பஸ் டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் பஸ்சை இயக்க முடியவில்லை. ஏற்கனவே பேரணிக்காக வாகனங்கள் வரிசையாக நின்ற நிலையில் அரசு பஸ்சும் திடீரென சாலையில் பழுதாகி நின்றதால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் கீழே இறங்கி பஸ்சை தள்ளினர். பின்னர் அந்த பஸ் ஸ்டார்ட்டாகி அங்கிருந்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story