தாழ்வான மின்கம்பிகளால் ஆபத்து
தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளால் ஆபத்து உருவாகி உள்ளது.
போகலூர்,
போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி அருகில் உள்ள எட்டிவயல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பால மக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பியே வாழ்கின்றனர். இங்குள்ள வயல் வெளிகளில் மின் கம்பங்கள் உள்ளன. மின்கம்பத்தில் உள்ள மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. விவசாயிகள், கால்நடைகள் செல்லும்போது உரசும் அளவிற்கு இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே வயல் வெளிகளில் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சரிசெய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story