உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது.

உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது.
x
தினத்தந்தி 24 April 2021 9:21 PM IST (Updated: 24 April 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது.

உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது.
உடுமலை உழவர் சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை உள்ளது. இந்த உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால், அவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 
காலையில் நடைபயிற்சிக்கு செல்கிறவர்களும், வீட்டிற்கு செல்லும்போது உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். வார நாட்களை விட சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கொரோனா வைரஸ்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் குறைவாக உள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால், முதல் நாளான நேற்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று உழவர் சந்தையில் காய்கறி கடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று அதிகாலை மழைபெய்திருந்த நிலையில் நேற்று உழவர்சந்தையில், எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லை. பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Next Story