பாப்பாரப்பட்டி மாநில விதை பண்ணையில் பிளாஸ்டிக் பைகளை எரித்ததால் புகை மூட்டம் பொதுமக்கள் பாதிப்பு


பாப்பாரப்பட்டி மாநில விதை பண்ணையில் பிளாஸ்டிக் பைகளை எரித்ததால் புகை மூட்டம் பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 24 April 2021 10:01 PM IST (Updated: 24 April 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி மாநில விதை பண்ணையில் பிளாஸ்டிக் பைகளை எரித்த புகை மூட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

பாப்பாரப்பட்டிடு
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் மாநில விதை பண்ணை செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குளிர்பதன பெட்டி மற்றும் கிடங்கு தளவாடங்கள் ஏற்றி வரப்பட்ட தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் பைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மாநில விதை பண்ணை வளாகத்தில் அந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் தெர்மாகோல் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில 50 அடி உயரத்திற்கு மேலாக கரும்புகை மூட்டமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

Next Story