தாராபுரம் அமராவதி ஆற்றில் கோடைவெயிலை சமாளிக்க பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனா்.


தாராபுரம் அமராவதி ஆற்றில் கோடைவெயிலை சமாளிக்க பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனா்.
x
தினத்தந்தி 24 April 2021 10:02 PM IST (Updated: 24 April 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அமராவதி ஆற்றில் கோடைவெயிலை சமாளிக்க பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனா்.

தாராபுரம், 
தாராபுரம் அமராவதி ஆற்றில் கோடைவெயிலை சமாளிக்க பொதுமக்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனா்.
உற்சாக குளியல்
உடுமலை அருகே அமராவதி அணையில் இருந்து தொடங்கும் அமராவதி ஆறு தாராபுரம் வழியாக கரூா் மாவட்டத்துக்கு செல்கிறது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீா் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. 
இந்த தண்ணீர் தாராபுரம் அமராவதி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு செல்கிறது. இதனால் கோடையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க தாராபுரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அமராவதி ஆற்றில் வந்து உற்சாக குளியல் போட்டு செல்கின்றனா்.
இதுகுறித்து தாராபுரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சிலா்கூறியதாவது:- 
அமராவதி ஆற்றில் தண்ணீர்
தாராபுரம் அமராவதி ஆற்றில் சுமாா் 10 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் கோடை காலத்தில் தண்ணீா் வந்து கொண்டு இருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடையை சமாளிக்க நாங்கள் அமராவதி ஆற்றுக்கு வந்து செல்கிறோம். 
ஆற்றில் அளவாக செல்லும் தண்ணீாில் குளிந்து மகிழ்கிறோம். தாராபுரம் பகுதியில் சீத்தக்காடு தடுப்பணை, புதிய பைபாஸ் ரோடு மேம்பாலம், அகஸ்தீஸ்வரா் கோவில், ஆங்கிலேயா் கால பழைய பாலம் ஆகிய பகுதிகளில் ஆற்றில் குளிக்க வசதியாக இருக்கிறது. காலையில் குழந்தைகளுடன் வரும் நாங்கள் ஆற்றில் குளித்து விட்டு செல்வது உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது. 
கோடைகாலத்தில் வெகுதூரங்களில் உள்ள அருவி, ஆறுகளுக்கு சென்று குளிப்பதால் எங்களுக்கு நேரமும் மற்றும் பணமும் விரையமாகி வந்தது. ஆனால் இந்த வருடம் இயற்கையின் நன்கொடையால் தாராபுரம் அமராவதி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் குளிப்பது எங்களுக்கு பேரானந்தமாக உள்ளது. எனினும் ஆற்றில் ஆழமான பகுதிகள் நிறைய உள்ளன. 
ஆபத்தில் சிக்கும் அவலம்
அங்கு செல்லாமல் பாதுகாப்பாக நாங்கள் குளித்து செல்கிறோம். ஆனால் வெளியூா்களில் இருந்து வருபவா்கள், இளைஞா்கள் பலா் ஆற்றை பற்றி அறியாமல் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனா். அப்போது அவா்கள் ஆழமான பகுதிகளுக்கு சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனா்.
 அதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் ஆழமான, ஆபத்து நிறைந்த பகுதிகளில் எச்சாிக்கை பலகை வைக்கவேண்டும். இதனால் உயிா் சேதம் தவிா்க்கப்படும் என அப்பகுதிபொதுமக்கள் தொிவித்தனா்.

Next Story