தூத்துக்குடி அருகே பிறந்தநாள் விழாவில் கத்தியால் கேக் வெட்டியவர் கைது


தூத்துக்குடி அருகே பிறந்தநாள் விழாவில் கத்தியால் கேக் வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 24 April 2021 10:10 PM IST (Updated: 24 April 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பிறந்தநாள் விழாவில் கத்தியால் கேக் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள மறவன்மடம் திரவியபுரம் ஆர்.சி கோவில் அருகில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் மணிகண்டன் என்பவர் கடந்த 22-ந் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜ் மகன் ராஜா (24), மகாலிங்கம் மகன் ஜெயகணேஷ் (21), புஷ்பராஜ் மகன் அதிர்ஷடலிங்கம் (27), சக்திவேல் மகன் யுவராஜா (24) ஆகியோருடன் பிறந்தநாள் கேக்கை வாள் போன்ற நீண்ட கத்தியை வைத்து வெட்டியுள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தார். அவரிடம் கேக் வெட்ட பயன்படுத்தப்பட்ட வாள் போன்ற நீண்ட கத்தியையும் பறிமுதல் செய்தார். 

Next Story