மடத்துக்குளம் பகுதியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்


மடத்துக்குளம் பகுதியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்
x
தினத்தந்தி 24 April 2021 10:12 PM IST (Updated: 24 April 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் பகலில் எரியும் தெருவிளக்குகள்

மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில், பெரும்பாலான பகல் நேரங்களில் வீணாக தெருவிளக்குகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பகல் நேரத்தில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் எரியும் இந்த தெருவிளக்குகளால், அரசின் நிதி தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில் தொடர்ந்து தெரு விளக்குகள் எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மீண்டும் இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. இதனால் மின்சாரம் இருந்தும், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, கடைத்தெருவுக்கு வரும் பொதுமக்கள், இருளை கண்டு அஞ்சுகின்றனர்.
 எனவே மடத்துக்குளம் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமலும், பகல் நேரத்தில் தேவையில்லாமல் தெரு விளக்குகள் எரிவதாலும் பொதுமக்களுக்கு பயன்படவேண்டிய தெருவிளக்குகள் இருந்தும் பயனற்று கிடக்கிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story