வால்பாறையில் வியாபாரிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு
வால்பாறையில் வியாபாரிகளுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வால்பாறை,
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வால்பாறையில் வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் அடங்கிய குழுவினர் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் வால்பாறை நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகளுக்கு சென்று கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது முகக்கவசம் அணியாதிருந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். முழு ஊரடங்கின்போது யாரும் தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் போபி, நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ், வருவாய் துறை அதிகாரிகள் ஈஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story