தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மானை நாய்கள் கடித்து குதறின
தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மானை நாய்கள் கடித்து குதறின.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி ஆண் புள்ளிமான் ஒன்று சாமிபுரம் ஊருக்குள் வந்தது. இதை நாய்கள் துரத்தி கடித்து குதறின. இதைபார்த்த பொதுமக்கள் நாய்களை துரத்தி மானை மீட்டனர். நாய்கள் கடித்து குதறியதில் மானுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனசரகர் சுகுமார், வனவர் ஈஸ்வரன் மற்றும் வேட்டை தடுப்பு அலுவலர்கள் விரைந்து சென்று மானை வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் அந்த மானை அய்யூர் வனப்பகுதியில் வனத்துறையினர் கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story