காவேரிப்பட்டணம் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலி


காவேரிப்பட்டணம் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலி
x
தினத்தந்தி 24 April 2021 10:30 PM IST (Updated: 24 April 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலியானார்.

காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 70). சம்பவத்தன்று அவர் காவேரிப்பட்டணம் அருகே கருக்கன்சாவடியில் உள்ள சூரிய நாராயணன் ஏரி பக்கமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது தவறி ஏரியில் விழுந்தார். இதனால் அவர் ஏரியில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story