கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் மகள் பிரியதர்ஷினி(வயது 14). இவர் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பிரியதர்ஷினியை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டுக்கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடோடி சென்று பிரியதர்ஷினியை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story