கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
மதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
மதுரை,ஏப்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக முதல்கட்டமாக 6 மையங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மையங்கள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 226 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கிடையே, தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தட்டுப்பாட்டை போக்க முதற்கட்டமாக 22 ஆயிரம் தடுப்பூசிகள் மதுரைக்கு வந்தடைந்தன.
இதனை தொடர்ந்து அந்த தடுப்பூசிகள் அனைத்து மையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டன. இதனை அறிந்த பொதுமக்கள் ஆர்வத்துடன், வரிசையில் நின்றபடி தடுப்பூசி போட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 867 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 2 லட்சத்து ஆயிரத்து 946 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்றைய நிலவரப்படி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1,380, அரசு மருத்துவமனை- ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,810, மாவட்ட சுகாதார கிடங்கில் 2,640 என மொத்தம் 6,830 தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் இருக்கிறது என சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story